Home செய்திகள் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள்; வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு..

கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள்; வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் டிச.26 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பயிரிட்ட பாசி பயிறு, மக்காச் சோளம், உளுந்து ஆகிய பயிறு வகைகளையும், பாப்பான்குளம் ஊராட்சியில் தொடர்மழை காரணத்தால் நெற் பயிர் சேதம் அடைந்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நமது மாவட்டத்தில் இதுவரை 228 கிராமம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 16 கோடி மதிப்பிலான 18.077 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 5 ஆடு, மாடுகள் உள்ளிட்ட 4800 கோழிகள் உயிரிழந்துள்ளது. முழுமையாக 92 வீடுகள் இடிந்துள்ளது. 200 வீடுகள் பகுதியாக இடிந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.சங்கரன்கோவில் அரசு ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், போர்வை உள்ளிட்ட பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். இந்த ஆய்வின் போது, இணைஇயக்குநர் (வேளாண்) பத்மாவதி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், உதவி இயக்குநர்கள் (வேளாண்) சங்கர், ஞானசுந்தரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் லாலா. சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, வேளாண் அலுவலர் மகேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com