Home செய்திகள் ராமநாதபுரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம்: ரயில்வே அமைச்சரிடம், மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள்

ராமநாதபுரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை விவகாரம்: ரயில்வே அமைச்சரிடம், மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள்

by mohan

இராமநாதபுரம் அருகே லாந்தை சுரங்கப்பாதைக்கு மாற்றாக பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட், அல்லது மேம்பாலம் அமைத்து தரக்கோரி ரயில்வே அமைச்சரிடம், மத்திய நிதி தமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.ராமநாதபுரம் அருகே லாந்தை ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் சூழ்வதால் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை கிராம மக்கள் 5 கிமீ தூர சுற்றுப்பாதையில் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பாதையை அப்புறப்படுத்த தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நவ.19 ல் ராமேஸ்வரத்திற்கு வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். லாந்தை ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றாக பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட் அல்லது மேம்பாலம் அமைத்து தரக்கோரும் மனுவை ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com