கீழக்கரையில் குருபூஜை மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் குறித்து பகுதி மக்களுடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மண்டபத்தில் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தில் பொதுமக்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா, குருபூஜை விழ உள்ளிட்ட விழாக்கள் சம்பந்தமாக பொதுமக்களிடம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பூஜையை அனைவரும் அவரவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திக் கொள்ளுமாறும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும், தடையை மீறி பொது இடங்களில் கூடினால் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

மேலும் பண்டிகை காலங்கள் ஆரம்பித்துள்ளதால் பொருட்கள் வாங்க வெளிவரும் நபர்கள் அனைவரும் முறையான முகக் கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். இக்கூட்டத்தில் கீழக்கரை பகுதி மைக்செட் உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் உரிமையாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிளக்ஸ் பேனர் அடிப்பது, தெருக்களில் மைக்செட் கட்டுவதை தவிர்ப்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கீழக்கரை ஆய்வாளர் பாலமுரளி, ஏர்வாடி ஆய்வாளர் கஜேந்திரன், சிக்கல் ஆய்வாளர் முருகதாசன், கீழக்கரை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.