Home செய்திகள் அரசியலுக்காக ஆட்சி நடத்தும் பாஜக மக்களுக்காக ஆட்சி நடத்தும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..

அரசியலுக்காக ஆட்சி நடத்தும் பாஜக மக்களுக்காக ஆட்சி நடத்தும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..

by Askar

அரசியலுக்காக ஆட்சி நடத்தும் பாஜக மக்களுக்காக ஆட்சி நடத்தும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..

மது­ரை­யில் நாடா­ளு­மன்ற தேர்­த­லில் மாபெ­ரும் வெற்றி பெறும் வகை­யில் உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல் பாசி­சம் வீழட்­டும் இந்­தியா வெல்­லட்­டும் என குரல் எழுப்­பும் வகை­யில் மக்­களை சந்­திக்­கும் மாபெ­ரும் பொதுக்­கூட்­டம் நடைபெற்றது. இக்­கூட்­டத்­திற்கு மதுரை மாந­கர் மாவட்ட செய­லா­ளர் கோ. தள­பதி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார் கழக துணைப் பொது செய­லா­ளர் ஆ.ராசா எம்.பி., மதுரை வடக்கு மாவட்ட செய­லா­ளர் வணி­க­வரி மற்­றும் பதி­வுத்­துறை அமைச்­சர் பி.மூர்த்தி, தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் டிஜிட்­டல் சேவை­கள் துறை அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் ஆகி­யோர் சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்;

வந்திருக்கிற அண்ணன் ராஜா அவர்கள் நீண்ட காலம் டெல்லியில் பல பொறுப்புகளில் பணியாற்றி இங்கே தெளிவாக இந்த தேர்தலினுடைய முக்கியத்துவத்தையும் பாசிசத்துடைய பெரிய ஒரு கேட்டையும் உரையாற்ற இருக்கிறார். எனவே மாநில அளவில் உறுப்பினராக அமைச்சராக இருக்கிற நான் மிகவும் விளக்கி கூற தேவையில்லை சுமார் பத்து நாட்களுக்கு முன் டெல்லியில் கர்நாடக முதல்வர் முதல் நாளும் அடுத்த நாள் கேரள முதல்வர் டெல்லி மாநில முதல்வர் பஞ்சாப் மாநில முதல்வர் ஒன்றிய அரசு உடைய ஒரு தலைபட்சமான நிதி ஒதுக்கீட்டிலும் குறிப்பாக தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் கொடூரமான செயல் செய்வதையும் போராடுவதற்காக கூட்டம் கூட்டியிருந்தார்கள். உரிமைகளுக்கு போராடுவதற்காக அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்னை கலந்து கொள்ளுமாறு வெளிநாட்டிலிருந்து கட்டளையிட்டதனால் நானும் போய் கலந்து கொண்டு சில கருத்துக்களை மற்றும் டெல்லியில் கூறிய அதே கருத்துக்களை மதுரையில் கூற விரும்புகிறேன். முதலில் எல்லா வகையிலும் மாநிலத்துடைய நிதி ஒதுக்கீடு குறைக்கிறார்கள் நிதி கடன் வாங்கக்கூடிய திறனையும் சட்டத்துக்கு விரோதமாக சட்டமைப்புக்கு விரோதமாக குறைக்கிறார்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் தடையாக இருந்து எப்படியாவது நம்முடைய வளர்ச்சியை குறைக்கணும் நம்மளும் பின்தங்கியே இருக்கணும் முன்னேறக்கூடாது என்ற அடிப்படையில் ஏனென்றால் பாசிசத்தை மத வெறியை இங்கே உள்ள நம்ம விடுறது கிடையவே கிடையாது போயிட்டு வான்னு சொல்றதுனால் எப்படியாவது நம்மை தண்டிக்கணும் என்பதற்காகவே இந்த செயல் செய்கிறார்கள் எத்தனையோ உதாரணங்கள் கூறினேன் அது பலருக்கும் தெரியும் ஆனால் நான் கூறின முக்கிய கருத்து எந்த அளவுக்கு நம்மிடம் இருந்து பணம் எடுத்தாலும் உரிமை பறித்தாலும் நமக்கு தவறான வகையில் கட்டுப்பாடு உருவாக்கினாலும் என்றைக்குமே அவங்களால் வெல்லவே முடியாது என்றைக்குமே நம்மளை வீழ்த்தவே முடியாது இதற்கு ரெண்டே ரெண்டு காரணம் சொன்னேன் அவங்க அரசியலுக்காக மட்டும் தான் ஆட்சி நடத்துகிறார்கள் அவங்க வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நடத்தறது இல்லை.

ஏனென்றால் நிஜமாவே வளர்ச்சிக்கு இந்த மக்களுக்கு நேரத்தில் நாம் முதல்ல எல்லாத்துக்கும் கல்வியை கொடுக்கணும் அதற்கு ஒரு படிப்பு கொடுக்கறது இல்ல. வளர்ந்ததாக சொல்லப்படும் குஜராத் மாநிலத்திலேயே 50 சதவீதம் பெண்கள் தான் பள்ளிக்கல்வியை முடிக்கிறார் என்றால் எப்படி வளர்க்க முடியும் அதே போல் நல்ல ஒரு பொருளாதார சூழ்நிலை உருவாக அரசியலுக்கு விரோதம் என்றதனால் அதையும் ஒரு போதும் இருக்க விட மாட்டார்கள் மூன்றாவது அவங்க எந்தெந்த நிறுவனம் இருக்கோ அது நீதிமன்றமாக இருக்கட்டும் எந்த எண்ணமோ ஜனநாயகம் நல்லா செயல்பட வேண்டும் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஒரு தலைப்பட்சமாக போகக்கூடாது பாசிசம் உருவாக்கக்கூடாது என்று சட்டமைப்பில் உருவாக்கப்பட்டு எந்தெந்த நிறுவனம் இருக்கோ அதையெல்லாம் கைப்பற்றி முடக்கி அதனுடைய செயலை மோசமாக்கினார்கள் எனவே அவங்க கையில் எவ்வளவு அதிகாரம் வந்தாலும் அவங்க கையில் எவ்ளோ நிதி இருந்தாலும் என்றைக்குமே தோல்வி அடையப் போகிறார்கள் மக்கள் முன்னேற்றதிலும் அரசாங்கத்திலும் அதே போல் எந்த அளவுக்கு அவங்க நம்ம மேல் நெருக்கடியை கொடுத்தார்களோ நம்மளோட பண்பு நம்மளுடைய கொள்கை நம்முடைய செயல்திறன் நம்மளுடைய இரக்கம் நம்மளுடைய மனிதநேயம் இதையெல்லாம் நம்ம சிறப்பாக பின்பற்றி நம்முடைய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் சிறப்பித்தால் அவர்கள் எவ்வளவுதான் நெருக்கடி கொடுத்தாலும் என்றும் நம்முடைய வெற்றியை நம்முடைய முன்னேற்றத்தை அவங்களால தடை செய்யவே முடியாது என்றது உறுதி என்று நான் டெல்லியில் கூறினேன் அதே கருத்தை டெல்லியிலும் சென்னையிலும் மதுரையில் பேசுகிறவர்தான் நான் பிரதமர் மாதிரி எந்த நாற்காலியில் உட்கார்ந்து வெவ்வேறு பேச்சு பேசுற ஆள் கிடையாது நான் ஒரே கருத்து தான் பேசுவேன்அது எதிர்கட்சியா இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என பேசினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com