காட்பாடியில் துரைமுருகன் எம்.எல்.ஏ., வீட்டை முற்றுகையிட முயன்ற தேமுதிகவை சேர்ந்த 42 பேர் கைது…

தேமுதிக இளைஞர் அணி தலைவர் எல்.சுதீஷ் திமுகவை பற்றி பேசும் போதுதிமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைமை மற்றும் கட்சியை பற்றி வேறுவிதமாக பேசியதாகவும் அதைவெளியே சென்னால் அசிங்கம் என்று சுதீஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.

இதனால் இருவருக்கும் முட்டல் முணுங்கல் எற்பட்டது. தேமுதிகவை கடுமையாக விமர்சித்த துரைமுருகன் வீட்டை (காட்பாடி காந்தி நகர்) முற்றுகையிட முயன்ற வேலூர் மாவட்ட தேமுதிக தலைவர் ஸ்ரீதர்  பொருளாளர் பிரதாபன் உள்ளிட்ட 42 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். கைதை கண்டித்து ஓடைப் பிள்ளையார் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர்

வேலூரிலிருந்து கேஎம்.வாரியார்

#Paid Promotion