இராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

நியாயமான சம்பளம், ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் இன்று (01.3.2019) ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் வி.பி.தினகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ஞானசேகரன் வரவேற்றார். மாநில இணை செயலாளர் எஸ்.மாரிமுத்து, மாவட்ட துணைத்தலைவர்கள் பி.பழனீஸ்வரன், டி.பி.செல்வம், துணை செயலர்கள் எஸ்.மாரிமுத்து, பி.திருமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கனி, எஸ்.முத்து, என்.ஜெகன் குமார், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பழனிகுமார், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். சந்திரசேகரன் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

தமிழ்நாடு சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன் முறை, பொட்டலம் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.