நில அளவை அலுவலர்கள் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

இணைய வழியில் விரைவு பட்டா வழங்கும் திட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் தனித்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலரின் அவசியமற்ற தலையீட்டை ஏற்படுத்தும் வருவாய் துறையின் முயற்சியை கை விட வேண்டும். அரசாணை விதி 303 ன் படி எந்த வித திருத்தமும் மேற்கொள்ளக் கூடாது. முதன்மை செயலரின் கடித எண் 497 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை ஒன்றிணைப்பு ராமநாதபுரம் மைய மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்