தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்நாடு மொபைல் மற்றும் ரீசார்ஜ் விற்பனை கடை உரிமையாளர்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
அவர்களின் கோரிக்கைகளவது தமிழகத்தில் 4லட்சம் சில்லறை மொபைல் மற்றும் ரீசார்ஜ் கடைகள் செயல்பட்டு வருகின்றது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் சைனிஸ் மொபைல் விற்பனையளார்கள் இலவசம் என்ற பெயரில் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு சில்லறை விற்பனையாளர்களை தொடர்ந்து நசுக்கி வருகின்றனர். இதனால் சில்லறை கடை உரிமையளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் சில்லறை மொபைல் மற்றும் ரீசார்ஜ் கடைகாரர்களை நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மொபைல் மற்றும் ரீர்சார்ஜ் விற்பனை சங்க தலைவர் முனிராஜ், ஜீவன்குமார், அன்பரசன், சீனிவாசன், பசுபதி,சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
You must be logged in to post a comment.