தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த பெண் மர்ம மரணம் குறித்து விசாரிக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விஜயலெக்ஷ்மி என்ற பெண் கடந்த 17ம் தேதி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரனை நடத்தி நூற்பாலை மேலாளரை கைது செய்ய வேண்டும் என்றும்,  தொழிலக பாதுகாப்பு அதிகாரிகளே! குடோனில் தங்க வைத்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்திய தொழிலாளர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்