Home செய்திகள் வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்..

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி எம்எல்ஏ தலைமையில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படுவது 58 கிராம கால்வாய் ஆகும்.கால்வாயில் தண்ணீர் வந்தால் 58 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில் வைகை அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்.ஆனால் தற்போது வைகை அணையின் நீர்;மட்டம் 70 அடியை எட்டிய போதும் தமிழக அரசு தண்ணீர் திறக்கவில்லை. தண்ணீர் திறக்க வலியுறுத்திய பல்வேறு அமைப்பினர்-விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!