Home செய்திகள் மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியை முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்..

மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியை முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்..

by ஆசிரியர்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்ப்பத்தி  பகுதியில் உள்ள சுங்க சாவடியை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன் தலைமையில்  மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் முற்றுகை போராட்டத்தில் அவைத் தலைவர் ராமர், பொருளாளர் சரவணன்,

மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்வின். பாபு, மாணிக்கவாசகம், சின்னதாய், பொதுக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஜெயராமன், பகுதி கழகச் செயலாளர் மோகன்,  தனபால், பத்மநாபன், மாரியப்பன், லெட்சுமணன், இப்ராகிம், ஆகியோர் கலந்து கொண்டனர்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com