Home செய்திகள் தென்காசியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

தென்காசியில் மின் வாரிய ஊழியர்கள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் வி. பச்சையப்பன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட சிஐடியு தலைவர் எஸ். அய்யூப்கான் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தோனி சேவியர், இளையராஜா, பட்டமுத்து, தாணுமூர்த்தி, ராஜசேகரன், வன்னிய பெருமாள், கிருஷ்ணன், குணசேகரன், மகாவிஷ்னு, அய்யப்பன், தென்காசி மாவட்ட சி.ஜ.டி.யு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் வாரியத்தில் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மத்திய அமைப்பு மாவட்ட பொருளாளர் நாகையன் ஆர்ப்பாட்டத்தின் நிறைவு உரையாற்றினார். இதில் மின் வாரிய ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட சிஐடியு தலைவர் எஸ். அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!