நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக கல்யாணராமனை குண்டாஸில் கைது செய்ய கோரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பாஜக சேர்ந்த கல்யாணராமனை குண்டாஸில் கைது செய்ய கோரி கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் கண்டன உரையை  ரெத்தின முகம்மது,  தலைவர், வடக்குத்தெரு ஜமாஅத்,   காதர் பக்ஸ் ஹூஸைன் நடுத்தெரு ஜமாஅத்,  அஹமது ஹூஸைன் ஆஸிஃப் கிழக்கு தெரு ஜமாஅத்,  ஹமீது சாலிஹ்தெற்கு தெரு ஜமாஅத்,  ஹமீது பைசல் வடக்கு தெரு ஜமாஅத்,  முஹம்மது ஃபரூஸ்கிழக்கு தெரு ஜமாஅத்,  காதர் முஹைதீன் பழைய குத்பா பள்ளி ஜமாஅத்,  கண்டன கோசம் அஹமது நதீர் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கம்),  தொகுப்புரை: பாதுஷா ( தெற்கு தெரு ஜமாஅத்) நன்றியுரை:  சீனி செய்யது இப்ராஹீம்  துணை செயலாளர், கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு சுபைர்.

இதில் கல்யாணராமனை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் எனவும், மதக்கலவரத்தை தூண்ட வேண்டாம் என கோஷங்களை எழுப்பினர்.மேலும் பாதுகாப்பு பணியில் கீழக்கரை டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திலகராணி, எஸ்.பி.எஸ்.ஐ செல்வராஜ், எஸ்.ஐ.சரவணன்,பாண்டி ஆகியோர் ஈடுபட்டனர்.