திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு….. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.. தொடர்ந்து கைது..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. கோவிலின் முன்பகுதியில் ஆடிப்பூர கொட்டகை இருக்கின்றது. கடந்த வாரம் ஆடிப்பூர கொட்டகை பகுதியிலுள்ள, ஆண்டாள் கோவிலின் கோட்டைச்சுவர் இடிக்கப்பட்டது.

இடிக்கப்பட்ட கோட்டைச் சுவர் அமைந்துள்ள பகுதி, வானமாமலை ஜீயர் மடத்தின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக, தனியார் அமைப்பிடம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சோமாலியா பவன் என்ற அந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நபர், வியாபார நோக்கில் செயல்பட்டு அதனை மாற்றி அமைக்க முடிவு செய்தார். அதன் ஒரு பகுதியாக ஆண்டாள் கோவிலின் கோட்டை சுவர் இடிக்கப்பட்டது. கோட்டைச்சுவரை இடிப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுவரை இடிப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆண்டாள் கோவில் கோட்டைச் சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை தனியாரிடமிருந்து மீட்டு, வானமாமலை ஜீயர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், தொண்டர்களை திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..