Home செய்திகள்கீழக்கரை செய்திகள் குடிதாங்கி குளத்தில் மீன்சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்- அரசியல் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பு..

குடிதாங்கி குளத்தில் மீன்சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்- அரசியல் கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பு..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் குடிதாங்கி குளத்தில் மீன் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

களக்காடு மக்கள் போராட்டக்குழு அலுவலக வளாகத்தில் A.K.நெல்சன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிர போராட்டத்திற்கு மக்கள் போராட்டக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் சித்திக், வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டத் தலைவர் S.R.ஷேக் முகமது, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், ராதாபுரம் சட்டமன்ற வழக்கறிஞரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜா, திராவிடத் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், மக்கள் தேசம் கட்சி திசையன்விளை நகரச் செயலாளர் வக்கீல் கண்ணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக் கண்ணன், மாவட்டத் தலைவர் காலேப், தமிழர் உரிமை மீட்புக்களம் ஒருங்கிணைப்பாளர் லெனின், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தென் மண்டல செயலாளர் அப்துல் அஜிஸ், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் விடுதலைக் களத்தின் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாண்டி, தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு, துணைச் செயலாளர் சுந்தர்ராஜ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநகர செயலாளர் இளையராஜா, சமூக செயற்பாட்டாளர் டாக்டர்.பகத்சிங் முகமது, குறிஞ்சியர் சமூக நீதி பேரவை மாநில மகளிரணி தலைவி இளவேயினி தங்கம், தென் மண்டல செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.மக்கள் போராட்டக்குழு செய்தி தொடர்பாளர் முகமது காஸிர் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!