இராமநாதபுரத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோரை இரட்டை கொலையை செய்த சாத்தான் குளம் கொடூர காவல்துறை கண்டித்து அனைத்து சனநாயக கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோரை இரட்டை கொலையை செய்த சாத்தான் குளம் கொடூர காவல்துறை கண்டித்து அனைத்து சனநாயக கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம்  எஸ்.முருகபூபதி, மாவட்ட செயலாளர்,   இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

1) ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைக்கு காரணமான காவலர்களும் மீது கொலை வழக்கு பதிவு செய்து நிரந்தர பணி நீக்கம் செய்து சிறை படுத்த வேண்டும்.

2) ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தாருக்கு நிவாரணம் நிதியாக  ஒரு கோடி வழங்க கோரியும்,

3) ஜெயராஜ் பென்னிக்ஸ் இரட்டை கொலைக்கு காரணமான நீதிபதி மருத்துவர் சிறைத்துறை அலுவலர் இதில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கொலை வழக்கு பதிவு செய்து வேண்டும்.

மேலும் இப்போராட்டத்தில் கீழை.பிரபாகரன் தலைவர் வீரகுல தமிழர் படை, க.நாகேசுவரன் தலைவர் பெரியார் பேரவை, சபீர் மாவட்ட செயலாளர்,  இசுலாமிய சனநாயக பேரவை,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, .எம்.பட்டாணி மீரான் மாவட்ட தலைவர் தமுமுக-மமக, முகம்மது தமிமும் நகர செயலாளர், தமுமுக- மமக, .மு.தமிழ்முருகன, மாவட்ட செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி, க..பாஸ்கரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,  ஆதித்தமிழர் கட்சி,  பரக்கத்துல்லா மாவட்ட பொதுச்செயலாளர், எஸ்டிபிஐ, மு.தமிழ்வாணன் மாவட்ட செயலாளர்,  சமூக விடுதலை முன்னணி,  அ..மாயகிருஷ்ணன் கடலாடி ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழர் கட்சி மற்றும் இன்னும் பல சமுதாய கூட்டமைப்புகள் கலந்து கொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..