Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை காஜிமார் தெருவில் பொதுமக்கள் போராட்டம்..

மதுரை காஜிமார் தெருவில் பொதுமக்கள் போராட்டம்..

by ஆசிரியர்

மதுரை மாநகரில் கொரோனா நோயின் தாக்கம் தீவிரமாகி வருகிறது. இதனை அடுத்து மதுரை மாநகரில் எண்ணற்றோர் கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் நோயாளிகள் வசித்த பகுதிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் இதுவரை காஜிமார் தெரு உள்பட 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டு உள்ளன. இதற்கிடையே மதுரை காஜிமார் தெருவை திறந்து விட கோரி, அங்கு 150-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர்.

எனவே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக திடீர் நகர் போலீசார் வட்டாரத்தில் பேசிய போது, ‘காஜிமார் தெருவில் ஒரு சிலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மதச் சடங்குகளில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து திடீர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு உள்ளவர்கள் போராட்டம் நடத்துவது கவலை தருகிறது ” என்று தெரிவித்து உள்ளனர்.

மதுரை காஜிமார் தெருவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!