அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் மணல் குவாரியை தடுத்திட சாலை மறியல் – வீடியோ..

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று(24/09/18) சாலை மறியல் செய்தனர்.

இந்த போராட்டத்தில் 75 க்கும் மேற்பட்டோர் திருமானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்த அனைவரையும் கீழப்பலூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

மேலும் இந்தப் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்காகவும், விவசாயத்திற்காகவும் ஏற்கனவே மணல் அள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மேலும் மணல் குவாரியில் மணல் எடுப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் இன்று சாலை மறியல் நடைபெற்றது. இதில் 75 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:- அபுபக்கர்சித்திக்

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்) கீழை நியூஸ்.