முகம்மது சதக் தஸ்தகீர் பள்ளி கல்வி ரீதியாக (2018 – 2019) ல் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா…

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2018-2019 ல் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி முதல்வர் திரு.எஸ்.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி முதல்வர் அனைவரையும் வரவேற்றுää இக்கல்வியாண்டில் (2018-2019); எங்கள் பள்ளி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் 75 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்த வெல்டன் மற்றும் மெரிட் சான்றிதழ்கள் பெற உள்ளனர். மேலும் வர இருக்கின்ற அரசு பொதுத்தேர்வில் எங்கள் பள்ளி 10ää 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெறுவர் என கூறினார்.

சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் கலால் கட்டுப்பாட்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர் முனைவர் திரு.வெள்ளைத்துரை அவர்கள் கலந்து கொண்டு இந்த கல்வியாண்டில் (2018-2019) காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பள்ளியின் மொத்த மாணவர்களில் 75 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 47 சதவீத மாணவர்களுக்கு “வெல்டன்” மற்றும் “மெரிட்” சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி மாணவ மாணவியர்களை பாராட்டினார். பள்ளி மாணவி அப்ஸின் நிஷா நன்றியுரை வழங்கினார்.