கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பலரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

தேனி மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 700 பேர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் பிரதமரின் வேளாண் நிதி உதவி திட்டத்தில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதில் வெளி மாவட்டத்தின் வங்கி கணக்கை இணைத்தவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் என 824 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது தவிர வெளி மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்த விவசாயிகள், ஊரடங்கு காலத்தில் அந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் என 9 ஆயிரம் பேரின் உண்மை தன்மை குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பலர் இந்த முறைகேட்டில் சிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..