வரும் தேர்தலில் தேமுதிக இருக்கும் அணி வெற்றி இருக்கும் – மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..

ஜெயலலிதா, கலைஞர் இல்லாத – இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான் – முதல் தேர்தல் தான். எல்லோர்க்கும் மிகப் பெரிய சவால்கள் காத்து இருக்கின்றன. சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி.

அப்போது அவர் கூறுகையில், எங்களது செயற்குழு, பொதுக் குழு கூடி முடிவெடுத்த பிறகு தேமுதிக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கும். தற்போது 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து, ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதா, கலைஞர் இல்லாத – இரு பெரும் தலைவர்கள் இல்லாத வருகின்ற தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் புதுத் தேர்தல்தான் – முதல் தேர்தல் தான். எல்லோர்க்கும் மிகப் பெரிய சவால்கள் காத்து இருக்கின்றன. எனவே இந்த தேர்தல் ஒரு மாற்றமான தேர்தல் தான்.

ஏற்கனவே நாங்கள் தனியாகத் தேர்தல் களம் கண்டவர்கள். கட்சி ஆரம்பித்து 16 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் பெரிய விஷயமில்லை. ஆதலால் செயற்குழு, பொதுக்குழு கூட்டி அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்போம்

சசிகலா வருகை குறித்த கேள்விக்கு,  சசிகலா அவர்கள் ஆளுமைமிக்க தலைவர் அவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் பணி தொடர ஒரு பெண்ணாக இருந்து வரவேற்கிறேன் தற்பொழுது ஒரு உடல் நலம் சரியில்லை என கேள்விப்பட்டேன் அவர் பூரண குணமாகி அரசியல் பணி தொடர வாழ்த்துகிறேன் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்போது நடவடிக்கைகள் குறித்து கேள்விக்கு தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் இதில் ஆண்டவரால் அவர் என்ற பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை கேப்டன் கூறியதுபோல் உப்பு தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்