Home செய்திகள் நிலவில் சந்திராயன்-3 லேண்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டி உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் மனம் உருக கூட்டுப் பிரார்த்தனை…

நிலவில் சந்திராயன்-3 லேண்டர் பத்திரமாக தரையிறங்க வேண்டி உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் மனம் உருக கூட்டுப் பிரார்த்தனை…

by ஆசிரியர்

நிலவின் தென்துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 ராக்கெட் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் முதல்முறையாக கால் பதிக்கும் என்ற பெருமையை இந்தியா அடைய உள்ளது.இந்நிலையில் நிலவில் சந்திராயன்-3 லேண்டர் சரியான பாதையில் திட்டமிட்டபடி தரை இறங்குவதற்கு பள்ளி மாணவ மாணவியர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்திராயன்-3 நிலவில் பத்திரமாக தரையிறங்க வேண்டி சந்திராயன்-3 லேண்டர் படம் மற்றும் தேசியக்கொடியை வைத்து கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர்.மேலும். அப்துல் கலாம் மேடம் அணிந்து வந்த மாணவர் எனது கனவு திட்டமான சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க தானும் இறைவனை பிரார்த்தனை செய்வதாக கூறினான். விழா நிகழ்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com