Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மின்வெட்டு இல்லா தமிழகம்… கீழக்கரையில் உள்ள பல பகுதிகளுக்கு பொருந்தாதா?… மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா??

மின்வெட்டு இல்லா தமிழகம்… கீழக்கரையில் உள்ள பல பகுதிகளுக்கு பொருந்தாதா?… மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா??

by ஆசிரியர்

புதிதாக பதிவியேற்று இருக்கும் திமுக அரசு, அதிரடியாக மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவித்து மக்களின் மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வருவதோடு அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே கடந்த காலங்களில் ஆட்சியை இழந்தமைக்கு தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  அதே போல் தற்பொழுது அரியனையில் ஏறி உள்ள நேரமும் கடுமையான கோடை காலம், ஆகையால் மின் தடை ஏற்பட அதீத வாய்ப்புகள் உள்ளது.

இதற்கு முன்னோட்டமாக கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் SS17 (முகைதீனியா பள்ளி அருகில்) ஒரு முனை மாற்றியில் (Single Phase Transformer) கடந்த இரண்டு வாரங்களாக  இரவு நேரங்களில் முன் அறிவிப்பில்லா மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது .

இது சம்பந்தமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், “கீழக்கரை பொறியாளரினம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார். கோடை காலத்தில் பொது முடக்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது . பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு அவசியம்” என வேதனையுடன் கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com