ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு போர்வை, வசதிகள் வழங்கும் விழா மற்றும் பொங்கல் விழா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா..

தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் வேலூர் மாநகரம், காட்பாடி செங்குட்டையில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் காப்பக மாணவிகளுக்கு போர்வைகள், தண்ணீர் பக்கெட், உள்ளிட்ட வசதிகள் வழங்கும் விழா பொங்கல் விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவிற்கு காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) எம்.சிலுப்பன் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. இந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பக குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இக் குழந்தைகளுக்கு நாங்கள் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். மாணவிகள் தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்றார்.

வேலூர் வட்டாட்சியர் ரமேஷ், போர்வைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் அப்போது அபோது அவர் கூறியதாவது. மாணவிகள் சின்ன சின்ன விஷயங்களுக்கு வேதனைபடாமல் விடா முயற்சியுடன் கல்வி பெற வேண்டும். கல்வி பெறும் போது சில நேரம் சில பாடங்களில் தோல்வியடைய நேரும் அப்போது மாணவிகள் துவண்டு விடாமல் பயிற்சி முயற்சி செய்தால் வெற்றி பெறலால் என கூறிய பொங்கல் வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறன் என்றார்.

குழந்தைகள் காப்பகத்தின் கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, முன்னிலை வகித்து பேசினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார். உடல்தானம் செய்தவர்கள்.. 1. திரு.எஸ்.இ.லட்சுமிநாராயணன், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 2. திருமதி.டிவிஎஸ்.லட்சுமிகுமாரி (அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன் அவர்களின் சகோதரி) உறுப்பு தானம் அதாவது கண் தானம் செய்தவர்கள் 3. திருமதி.சி.சரோஜா (பதிவுத்துறை திரு.க.சக்ரவர்த்தி அவர்களின் மனைவி மற்றம் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களின் சகோதரி) 4. திரு.செ.ந.நாகலிங்கஆச்சாரி, (செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களின் தந்தை) ஆகியோருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மு.சிலுப்பன் விருதுகள் வழங்கி கௌரவித்தார். காப்பக மாணவிகளுக்கு போர்வைகள், தண்ணீர் வாளி, உள்ளிட்ட வசதிகள் வேலூர் சால் ஆட்சியர் கே.மெகராஜ் அவர்கள் சார்பில் வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் வழங்க காப்பகத்தின் கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி, பெற்றுக்கொண்டார். ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மருத்துவர் வீ.தீனபந்து, எல்.ரவிச்சந்திரன், எஸ்.திருநாவுக்கரசு, எம்.பிரபு, முதலுதவிக்குழு உறுப்பினர் கே.ஜான்சன் வசந்தகுமார் வாழ்நாள் உறுப்பினர் லிவிங்ஸ்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகள் பொங்கல் கொண்டாடி அனைவரும் பொங்கல் பகிர்ந்து சாப்பிட்டனர். முடிவில் அவை துணைத்தலைவர் இரா.சீனிவாசன், நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.சிலுப்பன், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் காப்பக குழந்தைகளுக்காக போர்வைகள், பக்கெட்(வாளி) உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் உடன் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- வாரியார், வேலூர்