பள்ளிவாசலில் நல்லிணக்க பொங்கல் கொண்டாட்டம்..

தமிழர் திருநாளையொட்டி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பள்ளிவாசலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்னை. இங்கு 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து அந்த விழாவை நடத்தி வருகின்றனர். தமிழர் திருநாளாம் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வாலாந்தரவை ஜும்மா பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் லுக்மான் தலைமையில், பள்ளிவாசல் நுழைவாயில் முன் பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் துவா செய்தனர் . இதில விவசாயம் செழிக்க, விவசாயிகள் நலம் பெற வேண்டி சிறப்பு செய்தனர் இதில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.