Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு:  கலெக்டர் அறிவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு:  கலெக்டர் அறிவிப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.6 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தெரிவித்ததாவது:  2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு 1, ரூ.1000 ரொக்கம் நியாய விலைக்கடை மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ..1,000 ரொக்கம வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற ஜன 7, 8, 9 ல் டோக்கன் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜன 10, 11, 12, 13, 14ல் சுழற்சிமுறையில் விநியோகிக்கப்படும். இப்பணியையொட்டி ஜன 12ல் நியாய விலைக்கடைகள் செயல்படும். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் டோக்கனால் குறிப்பிட்ட நாள், நேரப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077-ல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com