கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரிக்கு என்.எஸ்.எஸ் பணிக்காக 2015-2016 ஆண்டிற்கான மாநில அளவிளான விருது வழங்கப்பட்டுள்ளது. சதக் பாலிடெக்னிக் பல் வகையான சமுதாய நலப்பணிகளை கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செய்து வருவது குறிப்பிடதக்கது.
இந்த விருதினை இக்கல்வி நிறுவனம் வாங்குவது இரண்டாவது முறையாகும். இதே விருதை 1999-2000ம் ஆண்டும் பெற்றது குறிப்பிடதக்க விசயமாகும். இந்த விருதிற்கான கேடயத்தை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர்.ராஜேந்திர ரத்னோ அவர்களும், சான்றிதழை என்.எஸ்.எஸ் மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா அவர்களும் வழங்கினர். இந்நிகழ்வின் போது தொழில்நுட்ப கல்வி இயக்க என்.எஸ்.எஸ் ஒருங்கினைப்பாளர்.டாக்டர்.சீதாராமன் உடனிருந்தார்.
இந்த விருதினை பெற்றமைக்காக கல்லூரியின் சேர்மன்.யூசுப் சாஹிப் மற்றும் நிர்வாகத்தினர், கல்லூரியின் முதல்வர் அ.அலாவுதீன், திட்ட அலுவலர் லெ.ராஜேஸ் கண்ணா மற்றும் வேல்முருகன் ஆகியோரைப் பாராட்டினர்
You must be logged in to post a comment.