
நேரு யுவ கேந்திரா, இராமநாதபுரம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி – மகளிர் மேம்பாட்டு அமைப்பு கீழக்கரை மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் – முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தின விழா மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. அலாவூதின் தலைமை வகித்தார். வரவேற்புரையை திருமதி. உமையாள், மேலாளர், மகளிர் மேம்பாட்டு அமைப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து கவிதை போட்டி மற்றும் சிலம்பொலி சாகசம் போன்றவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல் வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்புரையை விஷ்ணு சந்திரன், I, A, S அவர்கள் சார் வட்டாட்சியர், பரமக்குடி வழங்கினார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையை சதீஸ்குமார், திட்ட உதவியாளர், நேரு யுவ கேந்திரா அளித்தார். மேலும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உமையாள் மற்றும் Rtn.பாலசுப்ரமணியன், தலைவர் ரோட்டரி சங்கம் கீழக்கரை, Rtn. மரியதாஸ் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் ஆலோசகர், ஜோஸ்வா முதலாம் ஆண்டு துணைத்தலைவர் ஆகியோர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிலம்பொலி தலைவர் லோகசுப்ரமணியனுக்கு முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்புகள் இணைந்து கேடயம் வழங்கி கெளரவித்தனர்.
புகைப்படத்தொகுப்பு:-
You must be logged in to post a comment.