
கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (02-12-2017) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாளாக கருதப்படும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுஃப் சாஹிப் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் இயக்குநர் ஹாமீது இபுராஹிம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை மற்றும் வெளியூர்களைச் சார்ந்த ஏராளமான மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்ட மார்க்க உரையாற்றினர். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புகழ் பாடும் மவ்லீதும் ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.