நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களால் கலகலப்படைய போகும் துபாய் மாநகரம்…

அமீரக துபாயில் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து சமுதாயத்தினரும் சமமாக வாழ்ந்து வரும் ஊர் என்றே கூறலாம். சாமானிய மனிதன் முதல்  சினிமாக்காரர்கள் வரை கவர்ந்து இழுத்த ஊர் இப்பொழுது அரசியல்வாதிகளையும் கவர ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம்.

வரும் தமிழ் புதுவருடம் அல்லது சித்திரை மாதத்தை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி மாலை 07.30 மணியளவில் தமிழக அரசியல் கட்சி திமுக இளைஞர் அணி துணை செயலாளர் மற்றம் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமீரகத்தில் உள்ள அல் அய்ன் சோசியல் சென்டரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் 14ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் துபாய் லத்திபா அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாமை அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையேற்று துவக்கி வைக்கிறார்.   பின்னர் அன்று மாலை 7 மணியளவில் ரிதம் ஈவன்டஸ் சார்பில் இந்தியன் மேல்நிலைப் பள்ளி சேக் ரசீத் அரங்கத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திருக்குறள் இசை குருந்தட்டை  புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார்.

அடுத்த நாள் 15ம் தேதி திமுக கட்சி செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு துபாய் தேரா லூலூ எதிர்புறம் உள்ள கிராண்ட் எக்ஸ்செல்சியர் (தேரா ஷெரட்டன்) ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கலந்து கொள்கிறார்.

துபாய் மாநகரம் இந்த வாரம் அரசியல் தலைவர்களின் வரவால் தமிழ் மக்களுக்கு நல்ல பொழுது போக்குடன் கூடிய வாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

1 Trackback / Pingback

  1. அமீரகம் வருகை தந்த தமிழக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது... -கீழைநியூஸ்

Comments are closed.