காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி :தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு  இரண்டாவது இடம்..

காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பிடித்தது.

தமிழக காவல்துறையின் திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் 800 மீட்டர் ஆண் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் ,ஆண் பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் ,கைப்பந்து, கபடி, கூடைப்பந்து ,கைப்பந்து, ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றன

இறுதியாக இன்று (02.02.2019) நடந்த இந்த விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அணியினர் முதலிடத்தையும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அணியினர் இரண்டாவது இடத்தையும் பிடித்து கோப்பையை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் தனித்தனியாக வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இந்த விளையாட்டு போட்டி விழாவில் மதுரை தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் கபில்குமார் சரத்கர், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மகேந்திரகுமார் ரத்தோட், ,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் சுகுணா சிங், மாநகரம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா அவர்கள் தலைமையிலான தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அணியினருக்கு மதுரை தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் பரிசுக் கோப்பையை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராம் பயிற்சி உதவி கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் ஆண் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.