Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இயற்கையை காக்க வந்த பேரிடர் தான் கொரோனாவா? ஒரு பொறியாளரின் ஆதங்க கொரோனா கவிதையான பாடல்!

இயற்கையை காக்க வந்த பேரிடர் தான் கொரோனாவா? ஒரு பொறியாளரின் ஆதங்க கொரோனா கவிதையான பாடல்!

by ஆசிரியர்

இயற்கையை காக்க வந்த பேரிடர் தான் கொரோனாவா? திண்டுக்கல்லைச் சேர்ந்த பொறியாளர் தீரஜ் பாஸ் என்பவர் ஆதங்கத்துடன் இந்த கொரோனா பாடலை படித்து வடித்துள்ளார், அதன் ஒலியும்… வரிகளும்..

இயற்கையை காக்க வந்த பேரிடர் தான் கொரோனாவோ… மனிதனின் கர்வம் இன்று உன்னால் தானே தொலைந்ததோ… எத்தனை கர்வம் கொண்டு இயற்கையை அழித்திருப்போம்.. அத்தனை கண்ட பின்பும் இயற்கை தன்னை புதுப்பிக்கும்..

இன்று தொழிற்சாலை வாகனப் புகையுமில்லை!

இங்கு படகு கப்பல் எதுமில்லை!

எங்கும் காற்று மாசு குறைந்ததுவே!

நீர் நிலைகளைக் கண்டால்…

இயற்கையதன் போர்க்களத்தில் நாம் உணர்ந்து இங்கு பல தானே.. இந்த நாட்களிலே குடும்பத்துடன் குடும்ப உறவுகளை மதித்திருந்தோம்.. ஆயுதம் தான் ஏந்தாமல் அகிம்சை போரையே நடத்துகின்றோம்.. தனித்திருந்து இந்த போரினிலே இயற்கையை தூய்மை ஆக்கிடுவோம்…..

விழிப்புணர்வு இருக்கும் வரையில் நம்மை நாடாது இந்த கொரோனா..ஆ.. ஊரடங்கு முடியும் வரையில் தனிமையில் காத்திருப்போம்.. எது வந்தால் கூட தனித்திருந்து போர்த்தொடுப்போம்..

இந்த இயற்கையின் ரகசியம் புரிகிறதே…

நம்மை நெறிப்படுத்தவே விழைகிறதே….

மனம் நல்லனவற்றை நினைக்கிறதே…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!