Home செய்திகள் மத்திய மாநில அரசுகள் இலவச வீடுகட்ட நிதி அளித்தும், அரசு அதிகாரிகள் தவணை தொகை செலுத்ததால் கடனாளியாகும் பொதுமக்கள்:- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகளிலும் மத்திய மற்றும் மாநில அரசின் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 2020 ஆண்டிற்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் தங்களுக்கு தேவையான இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை பசுமை வீடு பிரதமர் மந்திரி வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்தனர், இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அரசு ஆணை வழங்கினார்.
 பொதுமக்கள் தெரிவிப்பது.
பாலக்கோடு அருகே கட்டுகாவாய் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசு ஆணை பெற்றவுடன்  வீட்டின் அடித்தளம் அமைத்து ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது . மேலும் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அரசாணை பெற்றும் இதுவரை முதல் தவணை தொகையை ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என தெரிவிக்கின்றார். ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் முருகன், ஒன்றிய மேற்பார்வையாளர் கண்ணன்  ஆகிய அதிகாரிகள் அலட்சியம் மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. வீடு கட்டுபவர்கள் தங்கள் சொந்த செலவில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி அடித்தளம் அமைப்பது சுவர் அமைப்பது தார் சமைத்து விட்டு பிறகு எங்களை வந்து பாருங்கள் என்று பொதுமக்களை பொதுமக்கள் புலம்பி வருகின்றனர் மேலும் பொதுமக்கள் கணிப்பொறி அதிகாரி ஒவ்வொரு முறை பார்க்கவேண்டும் என கூறுவதால் பொதுமக்கள் வீட்டு பணியை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். வீடு கட்டும் ஏழைகளுக்கு அரசு வழங்கும் நிதி சரியான முறையில் சேராததால் கடன் வாங்கி வீடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசு செய்யும் நலத்திட்ட உதவிகளை அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பொதுமக்களுக்கு போதிய உதவி செய்ய முடியாத நிலை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!