நிலக்கோட்டை பூ மார்க்கெட் கடைகளில் பேரூராட்சி அலுவலர் அதிரடி.. தடை செய்யப்பட்ட 100-கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்….

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேருராட்சியில் 17-வார்டுகள் உள்ளன இப்பகுதியில் மிகவும் பிரபலமான பூ மார்க்கெட், காய்கனி வணிக வளாகம் மற்றும் வாரச்சந்தை உள்ளன.

இப்பகுதியில் இன்று மாலை நிலக்கோட்டை பேருராட்சி அலுவலர் தலைமையில் பூ மார்கெட் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது பூ மார்க்கெட்டில் 56-வது கடையில் பூக்களை பார்சல் செய்வதற்காகவும் ஏற்றுமதி பேக்கிங் செய்வதற்காகவும் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் சுமார் 100- கிலோ அளவில் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் செயல் அலுவலர் கூறுகையில், இது போன்ற மண்ணுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாலித்தீன் பைகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போல வணிகர்களும், வணிக நிறுவனங்களில் கடைகளில் பாலித்தின் பைகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்பவர்களுக்கு பேருராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு செய்யபடுவார்கள்’ என்றார். மேலும் கைபற்றப்பட்ட கடைக்காரர்க்கு உரிய அபதாரம் விதிக்கப்படும் என்றும் இது போன்ற திடீர் சோதனைகள் தொடரும் என்றார்.