Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு..

பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு..

by ஆசிரியர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் நிவாரண உதவி மையம் 27.05.2021 அன்று காலை 11.30 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவிட் நிவாரணப் பணிகளுக்காக சேவையாற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,  அதில் ஒரு பகுதியாக பேரிடர் உதவி மையம் பெரியபட்டினம் ஊராட்சியில் தொடங்கப்பட்டது.

இதில் மருத்துவ உபகரணங்கள், கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு, உணவுப் பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தல், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தல், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் சோதனை போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான உதவி மையத்தை இன்று 11:30 மணி அளவில் Dr.ராசிக் தீன் (Block Medical Officer) அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் தலைமை தாங்கினார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது ரசின் முன்னிலை வகித்தார். மேலும் ஊராட்சி கவுன்சிலர் பைரோஸ் கான், பெரியபட்டினம் அரசு சுகாதார மைய மருத்துவர் Dr.நிவின்சன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!