கீழக்கரையில் பல்வேறு சங்கங்கள் சார்பாக சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு..

இன்று 21/01/2019 கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மற்றும் கீழக்கரை பெண்களும் பொது மக்கள் சார்பாகவும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம்,  MYFA (புதுத்தெரு),  இஸ்லாமிய சமதர்ம சங்கம்,  முஸ்லிம் பொது நலச்சங்கம்,  TMMK, SDPI, TNTJ,  போன்ற சமுதாய இயக்ககளின் நகர் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குறை தீர்க்கும் நாளான இன்று,  கடந்த வாரம் ஜாமியநகர்பள்ளி அருகில் சமூக விரோதிகளால் கத்தியால் குத்தி படு கொலை செய்யபட்டவரின் கொலையில் சம்பந்தப்பட்ட 3 நபர்கள் மீது வெளியில் வர இயலாத குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குகள் பதியவும், மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.

இம்மனு மனு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குறுதி அளித்தனர்.