தனியார் தோட்டத்தில் வியாபார நோக்கத்துடன் தண்ணீர் எடுப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு..

பனைக்குளம், அழகன்குளம் பகுதியில் சுமார் 3,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் கிணற்று நீரையே நீர் ஆதாரமாக கொண்டுள்ளார்கள். ஆனால் சமீப காலமாக இஸ்மாயில் என்பவரின் தனியார் தோட்டத்தில் இருந்து வியாபார நோக்கத்துடன் தினமும் பல லாரிகளில் குடிநீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, வீடுகளின் கிணற்றுகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

இதை தடுக்க கோரி அழகன்குளம் பொதுமக்கள் முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, பனைக்குளம் மூலமாக தனியார் தோட்டத்தில் குடிநீர் எடுப்பதை தடுத்து, நீராதாரத்தை காக்க இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.