தமிழர்களின் முயற்சியால் தாய்லாந்து நாட்டின் ‘சந்தபுரி’ நகரில் புதிய பள்ளிவாசல் திறப்பு..!

தாய்லாந்து நாட்டின் தலைநகரமாம் பேங்காங்க்கிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் கம்போடிய நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சந்தபுரி மாநகரம். 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தாய்லாந்து மக்கள் அதுபற்றிய போதிய விவரமில்லாமல் செய்து வந்த விலையுயர்ந்த மாணிக்க கற்கள் வியாபாரத்தை உலக பிரசித்திப்பெற வியாபாரமாக மாற்றிய பெருமை நம் தமிழர்களை அதிலும் குறிப்பாக தமிழ் வழி இஸ்லாமியர்களையே சேரும்.

இதில் நீடுர்-நெய்வாசல் எனும் ஊரைச்சேர்ந்த “நஜீம் பிரதர்ஸ்” குழுமத்திற்கு மிகப்பெரிய பங்கும் பெருமையும் உண்டென்றால் அது மிகையில்லை. அத்தகைய நஜீம் பிரதர்ஸ் குழுமங்களைச் சேர்ந்த ஒருவர்தான் அல்ஹாஜ் ஹுமாயூன் அப்துல் மஜீத். அவரின் முன் முயற்சியால் சில தமிழ் வழி இஸ்லாமிய உறவுகள் ஒன்றிணைந்து இந்த பிரமாண்ட இறை இல்லத்தை வடிவமைத்து கட்டியிருக்கிறார்கள்.

இப்பள்ளியின் திறப்பு விழாவிற்கு உலகில் உள்ள பல பகுதியில் இருந்து தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டன. தமிழ்நாட்டில் இருந்து தமீமுல் அன்சாரியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.

இப்பள்ளி இவ்வளவு பிரமாண்டமான வகையில் உருவாக வேண்டி பொருளுதவியும் உடல் உழைப்பும் செய்து ஒவ்வொரு பணிகளையும் சிரமேற்கொண்டு முடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் பல்லாயிரம்.

புகைப்படத்தொகுப்பு