மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மகளிர் பொது கழிவறை மறு சீரமைப்பு திட்டம்…

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெரிய வெண்மணி பஞ்சாயத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகே மகளிர் பொது கழிவறை உள்ளது . இவை கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அவற்றை மறுசீரமைப்பு செய்ய கோரி தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு கடந்த ஆண்டு சமூக ஆர்வலரால் மனு அனுப்பப்பட்டது. அது அங்கிருந்து  அந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் பார்வைக்கு சென்றது. மகளிர் பொது கழிவறைக்கு நிதி ஒதுக்குவதற்காக மாவட்ட ஆட்சியர் பார்வைக்கும் சென்றது.

ஆனால் இதுநாள் வரை மாவட்ட ஆட்சியர் மகளிர் பொது கழிவறை மறுசீரமைப்பு செய்ய நிதி வழங்க ஒப்புதல் அளிக்காமல் கால தாமதப்படுத்தி வருகிறார்கள். மகளிர் பொதுக் கழிவறையைக் மறுசீரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியர் ஏன் இதுவரை நிதி வழங்க ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஊராட்சி பொது நிதியிலிருந்து மகளிர் பொது கழிவறை சீரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் தேவையா? அப்படி என்றால் இதுநாள்வரை ஊராட்சியில் செலவிடப்படும் நிதிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒப்புதல் பெற்றுதான் நிதி வழங்கப்படுகிறதா ?

மாவட்ட ஆட்சியர் மக்கள் நலத்திட்டங்களில் எவ்வளவு வேகமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்த மகளிர் கழிவறை திட்டத்துக்கு நிதி வழங்காமல் காலதாமதம் படுத்துவதிலேயே நமக்கு தெரிகிறது ?

சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜனின் பதிவு

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்