Home செய்திகள் புதிய வீட்டின் கட்டுமானப் பணி: மின்ப யன்பாட்டில் முறைகேடு  கலெக்டரிடம் புகார்..

புதிய வீட்டின் கட்டுமானப் பணி: மின்ப யன்பாட்டில் முறைகேடு  கலெக்டரிடம் புகார்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.28 – இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம், புதுமடம் ஐக்கிய சபை  தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான செய்யது.மு.கௌஸ், அளித்த மனு:  புதுமடம் மன்ற  ஊராட்சி தலைவர் காமில் உசேன். இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள இடத்தில் புதிய கட்டி வருகிறார். வீட்டு மின்சாரத்தை புதிய வீடு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதி ஒருவரே சட்டத்தை மீறுபவராக உள்ளார்.

ஊராட்சி தலைவர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து உச்சிப்புளி மின்சார வாரிய உதவி பொறியாளர், போர்மேன், மின் நுகர்வு கண்கெடுப்பு பணியாளர் ஆகியோரை சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். புகாருக்குரிய மின் இணைப்பு எண்ணில் ஓராண்டு மின் பயன்பாடு கணக்கீடு அபராத தொகையுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் ஷெரீப் உடன் இருந்தார். இது குறித்து ராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீராம் கூறுகையில், மின்வாரியத்திற்கு கிடைத்த தகவல் படி முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதாக கூறப்படும் வீட்டு இணைப்பு எண் மின் நுகர்வை உரிய கணக்கீடு செய்து முறைகேடான பயன்பாடு என தெரிய வந்தால் அபராதத்துடன் வசூல் செய்ய உதவி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com