Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த ஆட்சியரிடம் எம்பி., மற்றும் திமுக., பிரதிநிதிகள் வலியுறுத்தல்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த ஆட்சியரிடம் எம்பி., மற்றும் திமுக., பிரதிநிதிகள் வலியுறுத்தல்..

by ஆசிரியர்

தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் திமுக., வினர் தங்களை ஈடுபடுத்தி கொள்ள திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் அவர் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கொரானா தடுப்பு பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் தலைமையில் திமுக., உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய கொரானா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவை, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசை வீரன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அவர்கள் ஆட்சியரிடம் முன் வைத்த கோரிக்கைகள்: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப்புற தூய்மை மற்றும், கிருமி நாசினி தெளிப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் கூடுதலாக கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் தூய்மைபடுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் எந்த விதத்திலும் பாதிக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இப்பேரிடரில் இருந்து மீண்டு வரும் வரை அனைத்து விதமான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் என உறுதியளித்தனர்.  ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் கே.டி.பிரபாகரன் (ராமநாதபுரம்), ப.முகமது முக்தார் (திருவாடானை), புல்லாணி (திருப்புல்லாணி), திமுக., பிரமுகர்கள் கமுதி போஸ், போகலூர் குணசேகரன், மண்டபம் திமுக மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!