கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம்

மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் நேற்று 18.03.2018 இரவு 8 மணியளவில் சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் கழகத்தின் தலைவர் தமீமுதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. துணை தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் முகைதீன் இபுறாகீம், பொருளாளர். வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், இணை செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, செயற்குழு உறுப்பினர்கள் பாவா பகுருதீன், செய்யது முஹம்மது பாதுஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நலனை கருத்தில் கொண்டு, கீழக்கரை பகுதியில் நாய்களை கட்டுப்படுத்துவது மற்றும் அப்புறப்படுத்துவது மற்றும் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மின் கட்டண சேவை மய்யத்தை மீண்டும் திறக்க கோருவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, கீழக்கரை நகராட்சியில் பல்வேறு நிதி கையாடல் முறைகேடுகளை செய்து பணியில் இருக்கும் இலஞ்ச பேர்வழிகளை பணியிட மாறுதல் செய்ய மீண்டும் மண்டல நகராட்சிகள் இயக்குநரை வலியுறுத்துவது, கீழக்கரை நகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரண்டு மதுபான கடைகளை அகற்ற சட்ட மேல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.