
புவியின் வெப்பம் அதிகரித்து வருவதை கண்டு சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். வருடந்தோரும் நடத்தப்படும் மாநாட்டில் பல நாடுகளிலிருந்து சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக வெப்பமயமாதல் (Global Warming) குறித்த ஆய்வுகளையும், பாதிப்புகளையும் விவாதித்து வருகிறார்கள்.
நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காற்று மாசுபட்டு வருவதால் ஓசோன் மண்டலத்தில் (Ozone Layer) பாதிப்புகள் ஏற்பட்டு வெப்ப நிலையில் மாறுதல் நிகழ்கிறது.
தட்ப வெப்ப நிலை அதிகரிப்புக்கு விஞ்ஞான வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றால் அது மிகையாகது. ஆரம்ப கால கட்டத்தில் மனித சமுதாயம் பயணம் மேற் கொள்ள மற்றும் பொருட்களை கொண்டு செல்ல கால் நடைகளை பயன்படுத்தி வந்தார்கள். பிறகு இரு சக்கர மிதி வண்டி போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது எரி பொருள் மூலம் ஓடுக்கூடிய மோட்டர் வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மோட்டார் வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் காற்றில் மாசு (Air Pollution) உருவாகி மிக பெறிய அளவில் ஓசோன் மண்டலத்தில் (Ozone Layer) பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
விஞ்ஞான வளர்ச்சியில் நாம் உச்சத்தை அடைந்தாலும் அதனால் ஏற்பட்ட சுற்றுப்புறச்சூழல் பாதிப்பினால் மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு மோட்டார் வாகனங்களின் புகையின் மூலம் வெளியேறும் கார்பண்டை ஆக்சைடு CO2 நமக்கு பகையாய் மாறி விடுகிறது.
இது குறித்து மக்கள் மத்தியில் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணற்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள். அதன் வரிசையில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்று வாலிபர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுற்றுபுறச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஹைதரபாத்தை சார்ந்த வாலிபர்களுக்கு கீழக்கரையில் இயக்கத்தின் செயலாளர் பஷீர் அஹமது சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“மிதியுங்கள்.. எரிவாயுவை சேமியுங்கள்…” என்ற குறிக்கோளின் அடிப்படையில் ஆந்திரா மாநிலத்தை சார்ந்த சந்திப்ரெட்டி (26), கிருஷ்ன கவுண்டனயாவிதுகிரி (21) ஆகியோர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்,150 நாட்களில் 22,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது போன்று அனைவரும் சைக்கிளை மிதிப்போம்,எரிவாயு சேமிப்போம், சுற்று சூழல் பாதுகாப்போம் என்று சமூக அக்கறையோடு அடி எடுத்து வைத்தால் நாமும் செழிப்போம் நாடும் செழிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…
You must be logged in to post a comment.