ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள்..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு   ஆணையத்தின் சார்பாக 2018-19ம்  ஆண்டிற்கான கிராம ஊராட்சி அளவிலான   விளையாட்டுப்  போட்டிகள்    கீழக்கரை    பேர்ல்   மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில்   நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே  100மீட்டர், 200மீட்டர் மற்றும் 400மீட்டர்  ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு   எறிதல்   தட்டு எறிதல், கைப்பந்து, கபாடி போன்ற   பிரிவுகளில்  போட்டிகள்   நடத்தப்பட்டு   வெற்றி   பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு  பதக்கம்   மற்றும்    சான்றிதழ்  வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு  தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கம்   மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில்   சீதக்காதி அறக்கட்டளை   துணை பொது  மேலாளர் சேக் தாவூத்கான், பள்ளி முதல்வர்   சாஹிரா பானு  மற்றும் தில்லையேந்தல்  ஊராட்சி  சிறப்பு அலுவலர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

————/////——————////—————————