பல லட்சம் செலவில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை மண்ணோடு மண்ணாகிப் போகும் அபாயம்..

கீழக்கரையில் கடந்த வருடம் நகராட்சியால் பல லட்சங்கள் செலவு செய்து பல பகுதிகளில் பேவர் ப்ளாக் சாலை போடப்பட்டது. சாலையின் தரம் குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் பல பகுதிகளில் போட்டு முடிக்கப்பட்டது.

ஆனால் பல பகுதிகளில் சாலைகள் மேல் மண்கள் குவிக்கப்பட்டு, பேவர் ப்ளாக் சாலை இருப்பதே தெரியாமல் மண்ணுக்குள் மூழ்கி வருகிறது. இதை நகராட்சி உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட பேவர் ப்ளாக் சாலை அடையாளம் தெரியாமல் போய்விடும். இதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் சாலையில் மண்ணை குவிப்பவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்க முடியும். கீழே உள்ள படம் கிழக்குத் தெரு பள்ளி வாசல் தெருவில் போடப்பட்டு இருக்கும் பேவர் ப்ளாக் சாலையாகும்….