பல லட்சம் ரூபாயில் உருவான கடற்கரை நடைபாதை வண்டி நிறுத்தமாக மாறி வரும் அவலம்..

கீழக்கரை கலங்கரைவிளக்கம் இருக்கும் பகுதியில் பல கோரிக்கைகளுக்கு பிறகு கடற்கரை சாலை நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் குறுகிய காலத்திலேயே கடற்கரை சாலை நடைபாதை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. இது சம்பந்தமாக ஐந்தாவது வார்டை சார்ந்த சாகுல் கூறுகையில், சமீபத்திலேயே மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, ஆனால் சில வாரங்களிலேயே பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம், நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

  1. இவனுங்களை ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது.
    இதற்க்கு நகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Comments are closed.