பனைக்குளம் பகுதியில் இன்று (12-12-2017) ஆட்சியர் ஆய்வு..

இன்று பனைக்குளம் பகுதிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பனைக்குளம் கிழக்கு பகுதிகளில் குறிப்பாக 3,4,5 வார்டுகளில் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் நோய் காரணமாக பாதிப்பு ஏற்படுவதால், இப்பகுதியில் சுகாதார துறையினர் தீவிர கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி பெருமளவு நோய் தாக்காத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தொடர் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கட்டுப்பாட்டு பணியில் இப்பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இப்பணிகளின் தொடர்ச்சியாக இன்று இராமநாதபுரம் மாவட்ட செவிலியர் பயிற்சி பள்ளி சார்ந்த பயிற்சி செவிலியர்கள் நூறு நபர்கள், கொள்ளை நோய் தடுப்பு களப் பணியாளர்கள் நாற்பது பேர் மற்றும் மண்டபம் ஊராட்சி சார்பான டி.பி.சி பணியாளர்கள் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் உதயகுமார் தலைமையில் வீடுவீடாக டெங்கு கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பக்ருதின் அரசு மேல் நிலைப்பள்ளியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் கலந்து உரையாடி தேர்வுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் கடின உழைப்பில் ஈடுபட்டு நூறு சதவீதம் தேர்வு பெற்று பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தருமாறும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்து செல்லுமாறு வேண்டு கோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் கோட்டாட்சியர் பேபி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா,டாக்டர் சசிகுமார்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன்,தலைமை ஆசிரியர் சையது அலி, மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் முகமது அனீஸ் சுகாதார ஆய்வாளர் ராஜா பார்த்த சாரதி ,ஊராட்சி செயலர் ரோகிணி ஆகியோர்கள் உடன் இருந்தனர்