Home செய்திகள் பாலக்கோடு பஸ் நிலையத்தில் பொது கழிப்பறைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோடு பஸ் நிலையத்தில் பொது கழிப்பறைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

by mohan
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலைத்திற்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினதோரும் பல்வேறு வேலைகளுக்கும், வெளியூர்களுக்கும் சென்று வருகின்றனர்.  இங்கிருந்து பெல்ரம்பட்டி, ஆத்துக்கொட்டாய், அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, ஜக்கசமுத்திரம் மற்றும் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இரவு பகலாக வந்து செல்லுகின்றனர். பஸ்நிலையத்தில் செல்பட்டு வரும் பொதுகழிவறை தண்ணீர் இல்லாத நிலையில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஆண்கள்  முகம் சூழிக்கும் சூழல் உள்ளது. மேலும் கழிவறை பகுதியில் மதுபாட்டிகள், சிகரெட் துண்டுகள், புகையிலை பொருட்கள் தேங்கி கிடப்பதால் தூர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுகழிவறைக்கு தினந்தோறும் பேரூராட்சிி நிர்வாகம்பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் விடாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுு  வருகிறது. மேலும் கழிவறையை ஒட்டியே உணவகம் உள்ளதால் கடைக்கு தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு புகார் அளித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுகழிவறையை தினந்தோறும் தண்ணீர்் விட்டு சீர்படுத்தவும்  கழிவரையைை பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!