Home செய்திகள் பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- அதிகாரியிடம் கடைக்காரர்கள் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது..

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- அதிகாரியிடம் கடைக்காரர்கள் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது..

by syed abdulla

பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- அதிகாரியிடம் கடைக்காரர்கள் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது..

பழனி முருகன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மலையடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் உதவியுடன் அகற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மலை அடிவாரத்தில் குடமுழுக்கு அரங்கம் முன்பு அக்கிரமிப்பு கடைகளை கோயில் அதிகாரிகள் அகற்றி வந்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண் வியாபாரிகள் கண்ணீர் விட்டு அழுது கடைகளை அகற்ற வேண்டாம் என கேட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த போலீசார் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மலையடிவாரத்தில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறுவதாகவும், பக்தர்களுக்கு இடையூறாக கடைகள் அமைக்க கூடாது என கோயில் அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்ததால் மலை அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!