இதற்குதானே ஆசைப்பட்டாய் மானிடா.. ஒரு புறம் மரம் வெட்டப்படுகிறது .. மறுபுறம் ஆக்சிஜன் விற்பனைக்கு…

இந்தியாவில் ஒரு புறம் மரம் வளப்போம் என்ற தட்டிகளை வைத்துக்கொண்டு மறுபுறம் நவீன சாலைகள் உருவாக்க மரங்கள் வெட்டப்பட்டு வருவதை நாம் தினமும் பார்த்த வண்ணம்தான் உள்ளோம். இவற்றுக்கு காரணம் லட்ச கணக்கான செடிகள் நடப்படுகிறது என கூறினாலும், நடப்படும் செடிகள் ஆக்ஸிஜனை தர பல வருடங்கள் அதற்குள் இன்னும் பல உயிர்கள் செத்து மடியும்.
இப்பொழுது சென்னை கடற்கரை மற்றும் இன்னும் பல பகுதிகளில் ஆக்ஸிஜனை கூறில் விற்பதை காண முடியும்.  காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மையான காற்றை தரக்கூடிய மரங்கள் அனைத்தும் ஆக்கிரமித்து வெட்டப்பட்டதுதான் காரணம்.
இந்த oxy99 எனும் ஆக்ஸிஜனை கேன் இப்பொழுது ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.  நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால், விரைவில் காலையில் பால் வாங்க வரிசையில் நிற்பது போல் ஆக்ஸிஜனை வாங்க நிற்கும் நிலை வந்து விடும்.

1 Comment

  1. நல்ல அரசியல் வாதிகள் அமைந்தால் நல்ல ஆட்சி நடக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்சி செய்யும் போது வேற என்ன நடக்கும் இதுதான் நடக்கும்

Comments are closed.